search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் 7 பயணிகள் பலி :அரசு போக்குவரத்து கழக டிரைவருக்கு ஓராண்டு சிறை
    X

    கோப்பு படம்

    விபத்தில் 7 பயணிகள் பலி :அரசு போக்குவரத்து கழக டிரைவருக்கு ஓராண்டு சிறை

    • விபத்தில் 7 பேர் பலியான வழக்கு திண்டு க்கல் 3-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • இந்த வழக்கில் அரசு டிரைவர் ராஜாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்க ப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்தார். கடந்த 2017-ம் ஆண்டு மே 5-ந் தேதி மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சை ஓட்டிச் சென்றார். அம்பாத்துரை அருகே அமலிநகர் பகுதியில் வந்தபோது சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது பஸ் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் 7 பயணிகள் சம்பவ இடத்தி லேயே பலியாகினர். இது தொடர்பான வழக்கு திண்டு க்கல் 3-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2022 ஜூலை 12-ந் தேதி இந்த வழக்கில் டிரைவர் ராஜாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்க ப்பட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து டிரைவர் ராஜா தரப்பில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதின்றத்தில் மேல்முறையீடு செய்ய ப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி மெகபூப்அலிகான் ராஜாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உடனடி யாக அமல்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

    Next Story
    ×