என் மலர்
உள்ளூர் செய்திகள்

தெரு நாய் கடித்து 6 ஆடுகள் பலி
- தெருநாய்கள் கடித்த நிலையில் ஆறு செம்மறி ஆடுகள் இறந்து இருந்தன.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் திம்மராஜ் (வயது46) விவசாயி. இவர் விவசாய நிலங்களில் ஆடு வளர்த்து வந்துள்ளார். இரவு நேரங்களில் ஆடுகளை வீட்டின் முன்பு பட்டியில் அடைத்து விட்டு இரவு தூங்கச் சென்று இருக்கிறார்.
இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் தெருநாய்கள் ஆடுகளைக் கடித்ததில் அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக எழுந்து வந்த திம்மராஜ் தெருநாய்கள் கடித்த நிலையில் ஆறு செம்மறி ஆடுகள் இறந்து இருந்தன.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திம்மராஜ் பஞ்சப்பள்ளி போலீசில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






