search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகளுக்கு   58 குப்பை சேகரிக்கும் வாகனங்கள்- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
    X

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மாலை அணிவித்து வரவேற்ற காட்சி.

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகளுக்கு 58 குப்பை சேகரிக்கும் வாகனங்கள்- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்

    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனத்தை வழங்கி அதன் சேவையை தொடங்கி வைத்தார்.
    • நிர்வாகிகள் கூட்டத்தில் தென்காசி தெற்கு தொகுதிக்கு கலைஞர் படிப்பகம் அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 88 ஆயிரத்தில் 58 வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வரவேற்று பேசினார்.தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனத்தை வழங்கி அதன் சேவையை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக ஆலங்குளம் வந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை, ஆலங்குளம் சேர்மன் திவ்யா மணிகண்டன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது செண்டை மேளம் முழங்க பெண்கள் பூரணகும்ப மரியாதை செலுத்தி அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்வி போஸ், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, சிவன் பாண்டியன், அன்பழகன், சீனித்துரை, மாரி வண்ணமுத்து, ஜெயக்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பி.எஸ். அண்ணா மலை, ஆலங்குளம் பேரூர் செயலாளர் நெல்சன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மருதம்புத்தூர் ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா, துணை அமைப்பாளர் சரஸ்வதி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் செல்வக்கொடி, ஊராட்சி தலைவர்கள் சந்திரசேகர், அய்ய னார்குளம் பஞ்சாயத்து தலைவர் நீதிராஜன், நல்லூர் பஞ்சாயத்து தலைவர் சிம்சோன், மருதம்புத்தூர் பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை மற்றும் சாந்தி ஆண்டி, வளர்மதி அய்யனார், பால்தாய், தானியேல், ஸ்நாபக அந்தோணி, கருப்பசாமி, மாலதி சுரேஷ், வெங்கடேஸ்வரி முரு கேசன், பாலசுப்பிர மணியன், மருதநாச்சியார், மீனா சுப்பிரமணியன், செல்வி மணிமாறன், மகரஜோதி சரவணன், முருகன், ஜெயராணி குமார், பூசத்துரை, பொன்ராஜ், புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பால்விநாயகம், முத்துலெட்சுமி முருகன், ராஜேஸ்வரி பால சுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி செயலர்கள், உதவி யாளர்கள், ஆலங்குளம் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடு களை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் செய்திருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஆலங்குளம் ஏ.ஜே. மகாலில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தென்காசி தெற்கு தொகுதிக்கு கலைஞர் படிப்பகம் அமை த்திட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வரவேற்று பேசினார். அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை தாங்கினார். அமைச்சர் கே .கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை, மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, அன்பழகன், சீனித்துரை, சிவன் பாண்டியன், மாரி வண்ணமுத்து, இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ், மகளிரணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மாணவரணி ரமேஷ் கதிர்வேல், ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் பேரூ ராட்சி தலைவர் பொன் அறிவழகன், இளைஞர் அணி கோமு, தளபதி, மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×