search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறந்த எழுத்தாளர்கள் 29 பேருக்கு பரிசு- சென்னையில் 18-ந்தேதி வழங்கப்படுகிறது
    X

    சிறந்த எழுத்தாளர்கள் 29 பேருக்கு பரிசு- சென்னையில் 18-ந்தேதி வழங்கப்படுகிறது

    • சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இரா.சுரேஷ்குமார் விழாவில் கலந்து கொண்டு சிறந்த நூல்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார்.
    • தலா 3 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் கொடுக்கப்படுகிறது.

    சென்னை:

    பிரபல எழுத்தாளரும், கவிஞருமான ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் நடத்தி வரும் கவிதை உறவு அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த நூல்கள் எழுதிய எழுத்தாளர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கி வருகிறது.

    கவிதைகள், மனித நேயம், வாழ்வியல், சிறுகதை, நாவல், இலக்கிய கட்டுரைகள், பொது கட்டுரைகள், குழந்தை இலக்கியம், கல்வி, இளைஞர் நலம், ஆளுமை மேம்பாடு, ஆன்மீகம், மத நல்லிணக்கம் உள்பட 10 தலைப்புகளில் சிறந்த புத்தகங்களை தேர்வு செய்து இந்த பரிசு வழங்கப்படுகிறது. இந்த பிரிவுகளில் தலா 3 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் கொடுக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு 51-வது ஆண்டாக கவிதை உறவு அமைப்பின் ஆண்டுவிழா வருகிற 18-ந்தேதி (வியாழக் கிழமை) தி.நகர் வாணி மகாலில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கு தமிழியக்க தலைவர் கோ.விஸ்வநாதன் தலைமை தாங்குகிறார்.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இரா.சுரேஷ்குமார் விழாவில் கலந்து கொண்டு சிறந்த நூல்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார். முன்னதாக விழா மலரை தொழில் அதிபர் நல்லிகுப்புசாமி வெளியிட தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக் கொள்கிறார்.

    'யாவரும் கேளிர்' என்ற நூலை டாக்டர் ஜெயராஜ மூர்த்தி வெளியிட எவர்வின் பள்ளிகள் நிறுவன தலைவர் புருஷோத்தமன் பெற்றுக் கொள்கிறார். வண்ணமில்லாமல் என்ன வானவில் என்ற நூலை தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அருள் வெளியிட சாந்தகுமாரி சிவகடாட்சம் பெற்றுக் கொள்கிறார்.

    விழாவில் சிறந்த நூல்கள் எழுதிய 29 எழுத் தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா.பூரணலிங்கம், புலவர் த.ராமலிங்கம், சோம.வள்ளியப்பன், ரேவதி, தாமரை செந்தூர் பாண்டியன் ஆகியோர் இந்த ஆண்டு பரிசுகள் பெறுபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    ஆரூர் தமிழ்நாடன், எஸ்.விஜயகிருஷ்ணன், சு.மதியழகன், தங்கம் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கவிஞர் ஏர்வாடி ராதா கிருஷ்ணன் ஏற்புரை வழங்குகிறார். இறுதியில் வானதி ராமநாதன் நன்றியுரை கூறுகிறார்.

    Next Story
    ×