என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெப்படை அருகே பெண்ணிடம் 5 பவுன்  தங்க சங்கிலி பறிப்பு
    X

    வெப்படை அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

    • கீதா (வயது 38). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையை அடுத்த பாதரை பகுதியில் உள்ள மெடிக்கல் கடையில் பணிபுரிந்து வருகிறார்.
    • மர்ம நபர்கள் 3 பேர், கீதா கழுத்தில் அணிருந்த 5 பவுன் தங்க சங்கலிைய பறித்துள்ளனர்.

    பள்ளிப்பாளையம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 38). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையை அடுத்த பாதரை பகுதியில் உள்ள மெடிக்கல் கடையில் பணிபுரிந்து வருகிறார். அவர் நேற்று இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு ெமாபட்டில் புறப்பட்டார்.

    வெப்படை செட்டியார் கடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், கீதா கழுத்தில் அணிருந்த 5 பவுன் தங்க சங்கலிைய பறித்துள்ளனர். அப்போது அவர் சத்தம் போட்டுள்ளார். மேலும் பின்தொடர்ந்து விரட்டினார்.

    அப்போது கொள்ளை யர்கள் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்த, கொள்ளையர்கள் 3 பேரும் மோட்டார்சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நுழைந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த வெப்படை போலீசார் சம்பவ இடத்தற்கு சென்று, விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில தினங்களக்கு முன்பு எலந்தகுட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மோட்டார்சைக்கிள் மாயமாகி விட்டது என வெப்படை போலீசில் புகார் கொடுத்தார்.

    கொள்ளயைர்கள் இந்த மோட்டார்சைக்கிளை திருடிக் கொண்டு வழிப்பறி சம்பவத்ைத நிகழ்த்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×