என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி மாவட்டத்தில் பெண்கள் உள்பட 5 பேர் மாயம்
- பெண்கள் உள்பட 5 பேர் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் மனைவி ஜெயபிருந்தா(24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 மாதமாக எரசையில் தங்கி ஜெயபிருந்தா வேலை பார்த்து வந்தார். கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் சின்ன மனூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
கடமலைக்குண்டு அருகே மந்திச்சுைணயை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் சத்யா(17). இவர் மயிலாடும்பாறையில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் தூங்கிகொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் கடமலை க்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வரு கின்றனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த வர் நாகபாண்டி மனைவி ரம்யா(26). இவர்கள் மகன் வேல்பாண்டி(3). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் மகனுடன் கெங்குவார்பட்டி யில் உள்ள தாய்வீட்டிற்கு வந்துவிட்டார். அங்கு வீட்டில் இருந்த ரம்யா மற்றும் வேல்பாண்டி திடீரென மாயமானார்கள். நண்பர்கள் மற்றும் உறவி னர்கள் வீடுகளில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்தவர் அய்யாத்துரை(52). இவர் சினிமாத்துறையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது பூர்வீக வீட்டை விற்க முயற்சி செய்து கொண்டி ருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் மாய மானார். இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அய்யாத்துரையை தேடி வருகின்றனர்.