என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு பருவமழை-நீலகிரியில் தயார் நிலையில் 456 பாதுகாப்பு மையங்கள்
- நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது.
- மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அப்பகுதிகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்து துறை, மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளை சேர்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 3500 முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் 150 பேரிடர் கால நண்பர்கள் பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
இதுதவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது மக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறே வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஊட்டி கோட்டத்துக்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்துக்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்துக்கு 04262-261295 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
ஊட்டி வட்டத்துக்கு 0423-2442433, குன்னூர் வட்டத்துக்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்துக்கு 04266- 271718, குந்தா வட்டததுக்கு 0423-2508123,
கூடலூர் வட்டத்துக்கு 04262-261252, பந்தலூர் வட்டத்துக்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.