search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே கடையின் மேற்கூரையை பிரித்து 40 செல்போன்கள் திருட்டு
    X

    கோப்பு படம்.

    ஒட்டன்சத்திரம் அருகே கடையின் மேற்கூரையை பிரித்து 40 செல்போன்கள் திருட்டு

    • இன்று காலை கடையை திறந்தபோது செல்போன் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • தனியாக உள்ள வீடுகளில் கொள்ளை யடிப்பது, நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையை சேர்ந்தவர் சங்கிலித்துரை. இவர் இடையகோட்டை பஸ்நிறுத்தம் அருகே செல்போன் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிச்சென்றார். நள்ளிரவு நேரத்தில் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிச்சென்றனர்.

    இதன்மதிப்பு ரூ.1 லட்சம் என சங்கிலித்துரை தெரிவித்துள்ளார். இன்று காலை கடையை திறந்தபோது செல்போன் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமி தலைமையில் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் செல்போ ன்களை திருடி ச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே கே.அத்திக்கோம்பையை சேர்ந்தவர் கணேசன். இவர் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வராணி தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்த ன்று 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.1.76 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். ஒட்டன்சத்திரம் மற்றும் இடையகோட்டை பகுதியில் தனியாக உள்ள வீடுகளில் கொள்ளை யடிப்பது, நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபடவில்லை. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×