என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராமப்பகுதியில் சுற்றித்திரிந்த 4 காட்டு யானைகள்
- தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.
- ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டி சென்று அங்கிருந்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட உள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து கர்நாடக மாநிலத்திற்கு விரட்டினர்.
இந்நிலையில் 20 காட்டு யானைகளும் முள்பிளாட் வனப்பகுதி அருகே சென்றபோது பல்வேறு குழுக்களாக பிரிந்தது. இதில் பிரிந்த நான்கு காட்டு யானைகள் கண்டகாணப்பள்ளியில் உள்ள ஏரியில் யானைகள் இறங்கி ஆனந்த குளியல் போட்டது.
இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இந்த நான்கு காட்டு யானைகளையும் வனத்துறையினர் பாலதொட்டப்பள்ளி, அகலக்கோட்டை, ரங்கசத்திரம் ஆகிய கிராமங்கள் வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டி சென்று அங்கிருந்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட உள்ளனர். இந்த பணிகளில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.






