search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்
    X

    வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு 'சீல்'

    • பட்டுக்கோட்டை நகராட்சிக்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
    • வாடகை பாக்கி அதிகம் உள்ள 4 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில், நகராட்சிக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் அமைந்துள்ளது.

    இந்த வணிக வளாக கடையின் குத்தகைதாரர்களுக்கு பலமுறை அறிவிப்பு வழங்கியும், பலமுறை வாடகையை செலுத்த கூறி அறிவுறுத்தியும் கடை வாடகை செலுத்தாமல் தாமதித்து வந்துள்ளனர்.

    இதனையடுத்து நகராட்சி ஆணையர் குமரன் உத்த ரவின் பெயரில், நகராட்சி மேலாளர் விஜயாஸ்ரீ தலைமையில், வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் குழுவாக சென்று வாடகை பாக்கி அதிகம் உள்ள 4 கடைகளை கண்டறிந்து அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர் .

    அப்பொழுது கடை எண் 6-ன் வாடகைதாரர் சஞ்சய் காந்தி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, நோட்டீஸ் ஏதும் வழங்காமல் கடையை போட்டி சீல் வைத்தீர்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இது குறித்து வருவாய் ஆய்வாளர் முருகேஷ்கூறும் பொழுது:-

    சீல் வைக்கப்பட்ட4 கடை களுக்கும் இந்த செப்டம்பர் மாதம் வரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 413 ரூபாய் வரை பாக்கி இருப்பதாகவும், அதிலும் தகராறு செய்த சஞ்சய் காந்தி மட்டும் 33 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும் கூறினார்.

    தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சஞ்சய் காந்தியிடம் அதிகாரிகள் நீங்கள் எது கூறுவதாக இருந்தாலும் ஆணையரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கடையை பூட்டி சீல் வைத்து விட்டு சென்று விட்டனர்.

    மேலும், வாடகை பாக்கி உள்ள கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வாடகை பாக்கி தொகையினை, முழுவதுமாக முறைப்படி செலுத்தினால் மட்டுமே சீல் அகற்றப்படும் என்றும் தெரிவித்தனர்.

    Next Story
    ×