search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் 4 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி - வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
    X

    வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் 4 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி - வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ்களும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 35-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கைப்பந்து, இறகு பந்து, எறிபந்து, கபடி மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது. போட்டியின் தொடக்கமாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

    தொடர்ந்து வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், இயக்குனர் சவுமியா ஜெகதீஷ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர். பின்னர் பள்ளி மாணவர்கள் தீபத்தை ஏந்தியவாறு மைதானத்தை சுற்றி வந்து பள்ளி தாளாளரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக் கொண்ட வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், விளையாட்டு கம்பத்தில் தீபத்தை ஏற்றி தடகள போட்டியை தொடங்கி வைத்தார்.

    12, 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளின் அடிப்படையில் ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ்களும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது. போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற புனித அந்தோணியார் பப்ளிக் பள்ளிக்கு வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியின் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

    Next Story
    ×