search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடைகளுக்கான 3-வது சுற்று  கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
    X

    கால்நடைகளுக்கான 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

    • எருதுகளின் வேலைத்திறன் குறைவதுடன், இளங்கன்றுகளின் இறப்பு சதவீதமும் உயரும்.
    • கால்நடைகளுக்கு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மூன்றாவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசித் திட்டம் மாா்ச் 1 ந்தேதி தொடங்குகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கான மூன்றாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசித் திட்டமானது மாா்ச் 1 ந் தேதி தொடங்கி மாா்ச் 21 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த கோமாரி நோயானது கால்நடைகளுக்கு கால், வாய்நோய் மற்றும் காணை என்றழைக்கப்படும் வைரஸ் நச்சுயிரியால் ஏற்படுகிறது.

    பொதுவாக கலப்பின மாடுகளை அதிகமாக இந்த நோய் தாக்கி கால்நடை வளா்ப்போருக்கு பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நோயால் கறவை மாட்டின் பால் உற்பத்தி குறைவதுடன், சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத்திறன் குறைவதுடன், இளங்கன்றுகளின் இறப்பு சதவீதமும் உயரும்.

    இதனால் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருப்பதற்காக கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 6 மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரு முறை அனைத்து கால்நடைகளுக்கும் (பசுவினம் மற்றும் எருமையினம்) கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் மாா்ச் 1 முதல் மாா்ச் 21 ந் தேதி வரையில் கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ளோா் கால்நடை நிலையங்களில் நடைபெறும் முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

    Next Story
    ×