என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டத்தில் 3,500 லாரிகள் ஓடவில்லை
- தருமபுரி மாவட்டத்தில் 3500 லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.
- குறிப்பிட்ட லாரிகளை தவிர மற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம் உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, காலாண்டு வரி உயர்வு, ஆன்லைன் அபராதம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளதால் இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 3,500 லாரிகள் பங்கேற்கிறது. எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் இந்த போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பாதுகாப் பாக லாரிகளை நிறுத்தி கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவரும், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில துணைத் தலைவருமான நாட் டான் மாது தெரிவித்தார்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் குறிப்பிட்ட லாரிகளை தவிர மற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.