என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருட்டுத்தனமாக மது விற்ற 3 பெண்கள் கைது
- பிரதாப் ,குணசேகரன் உள்ளிட்டோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- ரூ.4 லட்சம் மதிப்பிலான 2407 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட கோபிநாதம்பட்டி பகுதிகளில் கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சிறப்பு காவல் ஆய்வாளர்கள் சக்திவேல் கமலநாதன் தலைமையிலான காவலர்கள் சுதாகர், மணிரத்தினம், சந்திரசேகர், பிரதாப் ,குணசேகரன் உள்ளிட்டோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ரோந்து பணியின் போது கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த கோபிநாதம்பட்டிக ிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ருக்மணி (வயது 60), கெங்கன் மனைவி செல்வி (65), வேங்கன் மனைவி சாந்தி (70) ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த, ரூ.4 லட்சம் மதிப்பிலான 2407 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Next Story






