என் மலர்
உள்ளூர் செய்திகள்

கர்நாடக மதுபாட்டில் கடத்திய 3 பேர் சிறையில் அடைப்பு
- போலீசார் தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனை பிரிவு அய்யூர்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.
- 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒசூர் சிறையில் அடைத்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநில மதுபாட்டில்களை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை வழியாக காரில் கடத்தி வருவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலிஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் எஸ்.ஐ ஜெயகணேஷ மற்றும் போலீசார் தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனை பிரிவு அய்யூர்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அய்யூர் நோக்கி சென்ற கர்நாடக பதிவு எண் கொண்டகாரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 2 பையில் காநாடக மது பானங்கள் இருந்துள்ளது.
காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டதில் கெத்தள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாமி மகன் சீனிவாசன் (39), காநாடக மாநிலம் கனகபுரா தாலுகா காடுசிவனஹள்ளிகிராமம் வெங்கடசாமி மகன் சினிவாசன் (29), சிக்க புட்டைய்யா மகன் சிக்கதொட்டோகவுடா40) ஆகிய 3 பேரும் கர்நாகட மாநிலத்தில் ருந்து மதுபானம் கடத்தி வந்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது தெரிய வந்தது.
காரில் இருந்த சுமார் ரூ.28000 மதிப்புள்ள பிராந்தி, விஸ்கி பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒசூர் சிறையில் அடைத்தனர்.






