என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செந்துறை அருகே 3 பசுமாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் சோகம் மின்சாரம், மின்னல் தாக்கியதால் பரிதாபம்
  X

  உயிரிழந்த பசுமாடுகள்.

  செந்துறை அருகே 3 பசுமாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் சோகம் மின்சாரம், மின்னல் தாக்கியதால் பரிதாபம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து மின் கம்பத்திலிருந்து ஒரு மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு அதே இடத்தில் உயிரிழந்தது.
  • திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது, திடீரென மின்னல் தாக்கி 2 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன.

  செந்துறை:

  திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா, சேத்தூர் ஊராட்சி க்குட்பட்ட இலுப்பபட்டியை சேர்ந்த அண்ணாத்துரை (வயது50). விவசாயியான இவர் பசுமாடு 2 வளர்த்து வந்தார். அந்த 2 மாடும் சினையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டின் முன்புறம் உள்ள தென்னை மரத்தடியில் 2 பசு மாடுகளை கட்டி வைத்திருந்தார்.

  அப்போது இரவு திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது, திடீரென மின்னல் தாக்கி 2 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன.

  இதுகுறித்து தகவல் அறிந்து கிராம நிர்வாக அலுவலர் முத்து, மற்றும் செந்துறை கால்நடை உதவி மருத்துவர் இந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த மாட்டை அதே பகுதியில் பரிசோதனை செய்தனர்.

  உயிரிழந்த மாடுகளின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார். மேலும் அவர் மின்னல் தாக்கி உயிரிழந்த மாடுகளுக்கு அரசின் இழப்பீடு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

  இதேபோல் சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மங்கம்மா சாலையைச் சேர்ந்த அழகு (வயது60) என்பவருடைய பசுமாட்டை களத்து வீட்டில் கட்டி இருந்தார். நேற்று திடீரென்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மின் கம்பத்திலிருந்து ஒரு மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு அதே இடத்தில் உயிரிழந்தது. மாட்டின் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும் என்று மாட்டின் உரிமையாளர் கூறினார்.

  அடுத்தடுத்து மின்சாரம் மற்றும் மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

  Next Story
  ×