என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜமாபந்தியில் 285 மனுக்கள் குவிந்தன
    X

    ஜமாபந்தியில் 285 மனுக்கள் குவிந்தன

    • 42 கிராமங்களுகான ஜமாபந்தி நிகழ்ச்சி 4 நாட்களாக நடைப்பெற்று வருகிறது.
    • 285 மனுக்கள் பெறப்பட்டு 70 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வருவாய் கோட்டத்திற்க்கு உட்பட்ட புலிக்கரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளி சந்தை ஆகிய பிர்காவிற்க்கு உட்பட்ட 42 கிராமங்களுகான ஜமாபந்தி நிகழ்ச்சி 4 நாட்களாக நடைப்பெற்று வருகிறது.

    இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நஜ்ரி இக்பால் தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் 285 மனுக்கள் பெறப்பட்டு 70 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

    நில உரிமை சம்மந்தமான 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    கடைசி நாளான நேற்று தாலுக்கா அலுவலக கூட்ட அரங்கில் தாசில்தார் ராஜா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், சப் கலெக்டர் நஜீரி இக்பால் கலந்துகொண்டு 70 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், பட்டா திருத்தம், இலவச வீட்டு மனை பட்டா ஆகியவற்றை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஓ.ஏ.பி. தாசில்தார் ரேவதி, வட்ட வழங்கல்அலுவலர்பழனி, துணை தாசில்தார்கள் சிவக்குமார், சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர்கள் ரவி, வி.ஏ.ஓக்கள் சாம்ராஜ், மாதப்பன், மாதேஷ், சத்யா, முருகேசன், குமரன், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×