என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இரும்பு கடை பூட்டை உடைத்து ரூ.2.20 லட்சம் பணம் கொள்ளை
  X

  இரும்பு கடை பூட்டை உடைத்து ரூ.2.20 லட்சம் பணம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது
  • ரூபன் சக்கரவர்த்தி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

  சேலம்:

  சேலம் ஓமலூர் மெயின் ரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபன் சக்கரவர்த்தி (வயது 32). இவர் கந்தம்பட்டி பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.

  நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றவர், நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரூபன் சக்கரவர்த்தி, கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த லாக்கரை உடைத்த மர்ம நபர்கள் ரொக்கப் பணம் ரூ.2.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

  இதுகுறித்து ரூபன் சக்கரவர்த்தி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தீவிர மாக தேடி வருகின்றனர்.

  Next Story
  ×