என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேவாரத்தில் 21 ஆடுகள் பலி
- தேவாரத்தில் 21 ஆடுகள் பலியானது. விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- இதுகுறித்து கால்நடைத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி:
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மல்லிங்காபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 55). இவர் ஆட்டுக்கிடை அமைத்து ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மாலை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மாலையில் பட்டியில் அடைத்து தூங்கச் சென்று விட்டார். இன்று காலையில் சென்று பார்த்த போது 21 ஆடுகள் மற்றும் 1 மாடு வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தன.
இதை பார்த்ததும் செல்லத்துரை அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தேவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கால்நடைத்துறைக்கும் தகவல் தெரிவித்து ஆடுகள் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடுகள் குடிக்கும் தண்ணீரில் விஷம் ஏதும் கலக்கப்பட்டதா? அல்லது நோய் தாக்குதலால் அடுத்தடுத்து உயிரிழந்ததா? என கால்நடைத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.