என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உறுதிமொழி
    X
    உறுதிமொழி

    சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள உறுதிமொழி

    சுகாதாரம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    ஊட்டி, 
    ஊட்டியை அடுத்த  கேத்தி தேர்வுநிலை பேரூராட்சி யில்  என் குப்பை என் பொறுப்பு என தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 
    இதில் என் நகரத்தை தூய்மையாகவும் சுத்தமா கவும் வைத்திருப்பது எனது கடமை பொறுப்பாகும்.  பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பது நகர தூய்மைக்கான முதற்காரணம் என்பதை நான் நம்புகிறேன், 
    தூய்மை பணிகளுக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ள என் நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டேன் பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பேன் என   உறுதி மொழி ஏற்றனர்.  
    நிகழ்ச்சியில்  கேத்தி தேர்வுநிலை பேரூராட்சி  தலைவர்  ஹேமாமாலினி மற்றும்      பேரூராட்சி செயல் அலுவலர்  நட்ராஜ், சுகாதார ஆலுவலர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    அதிகரட்டி பேரூராட்சியில்   நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு திட்டத்தின் கீழ்  தூய்மை விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.   செயல் அலுவலர் ஜெகநாதன், பேருராட்சி தலைவர் பேபி,  பேருராட்சி செயலர் மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  பல்வேறு இடங்களில் மரகன்றுகள் நடப்பட்டன. 
     
    கூடலூர் நகராட்சியில் தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்க பேரணி நடைபெற்றது. பேரணியை நகராட்சித் தலைவர் பரிமளா கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் சிவராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி ராஜகோபாலபுரம், பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு, ஐந்து முனை சந்திப்பு வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. பேரணியில் தோட்ட தொழிலாளர் குழந்தைகளின் தொழிற்ப யிற்சி மைய மாணவ- மாணவிகள், வியாபாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் எனது குப்பை எனது பொறுப்பு, எனது நகரத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணிப்பாதுகாப்பேன் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

     ஓவேலி பேரூராட்சி சாா்பில் பெரிய சூண்டி பகுதியில் நடைபெற்ற விழிப்புணா்வு  பேரணிக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ராதேவி, துணைத் தலைவா் க.சகாதேவன் ஆகியோா் தலைமை வகித்தனா். மன்ற உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
    பேரணியை தொடா்ந்து ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் சுகாதாரம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
     நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலா்  ஹரிதாஸ் மற்றும் பணியாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×