என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுற்றுலா வேன்
3 கார்கள் மீது அடுத்தடுத்து மோதிய சுற்றுலா வேன்
6 குழந்தைகள் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்
அரவேனு,
நீலகிரி மாவட்டத்திற்கு சேலம் சங்ககிரியில் இருந்து வேனில் 3 குடும்பங்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் சுற்றுலாவை முடித்து விட்டு நேற்று மாலை ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக சங்ககிரிக்கு வீடு திரும்பினர்.
கோத்தகிரி கட்டபெட்டு பஜார் பகுதியில் வந்த போது திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அந்த பகுதியில் நின்று இருந்த 3 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
அப்போது எதிரே வந்த மற்றோரு கார் மீது மோதி வேன், கார் மீது கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 3 பேர் காயங்களின்றி தப்பினர்.வேனில் வந்த 6 குழந்தைகள், 4 ஆண்கள், 4 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேன் கவிழ்ந்த பகுதியில் 40 அடி பள்ளம் உள்ளது. வேன், கார் மீது விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்த கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






