search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    திண்டுக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 10 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பொதுத்தேர்வுகள் முடிந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு இன்று காலை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மேலும் காலம் கடத்தாமல் விரைந்து அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வை நிலுவைத்தொகையுடன் உடனே வழங்கவேண்டும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார்.

    துணைத்தலைவர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சுவக்கின்அமல்ராஜ் கோரிக்கை விளக்கஉரையாற்றினார். செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன், பொருளாளர் செந்தில்குமார் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×