என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் மனு அளிக்கப்பட்ட காட்சி.
    X
    கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் மனு அளிக்கப்பட்ட காட்சி.

    திருச்செந்தூர் கோவிலில் சண்முக விலாசம் முகப்பு அடைப்பை திறந்து விட வேண்டும்-நுகர்வோர் பேரவை கோரிக்கை

    திருச்செந்தூர் கோவிலில் சண்முக விலாசம் முகப்பு அடைப்பை திறந்து விட வேண்டும் என நுகர்வோர் பேரவை சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருச்செந்தூர்:

    பக்தர்கள் நலன் கருதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள சண்முக விலாசம் முகப்பு அடைப்பை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம்  கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

     சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் முதல் உதவி சிகிச்சை மையம் உள்ளது. அதற்கு அவசரகால ஆம்புலன்ஸ் வசதி இல்லை எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன ஆம்னி ஆம்புலன்ஸ் கோவில் சார்பில் வாங்கி பயன்படுத்த வேண்டும். கொடிப்பட்டம் ஆண் யானை மீது வருவது வழக்கம் சம்பிரதாயத்தை மீறி பெண் யானை மீது தற்போது வருகிறது.

    எனவே ஆண் யானை ஒன்று கோவில் நிர்வாகம் சார்பில் வாங்கி சம்பிரதாயத்தை காக்க வேண்டும், கோவில் வெளிபிரகாரத்தை கட்டிய வள்ளிநாயகம் சுவாமி சமாது பழுதடைந்துள்ளது அதை புதுப்பிக்க வேண்டும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள சண்முக விலாசம் முகப்பு அடைப்பை திறந்துவிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×