search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து நெரிசலால் கடைவீதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்தம்பித்து நிற்கும் வாகனங்கள்.
    X
    போக்குவரத்து நெரிசலால் கடைவீதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்தம்பித்து நிற்கும் வாகனங்கள்.

    மணல் ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்

    திருவையாறில் குவாரியில் இருந்து மணல் ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    திருவையாறு:

    திருவையாறு நகரம் சாலையோர கடை ஆக்கிரமிப்புகளினாலும், வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதாலும், நகரக் கடைவீதிகளில் வாகனங்கள் ஒன்றை–யொன்று முந்திக் கொண்டு செல்ல முற்படுவ–தாலும், பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல் பஸ்கள் வெளியில் நின்று பயணி–களை இறக்கி ஏற்றுவதாலும் அடிக்கடி திருவையாறு நகரக் கடைவீதிகள் போக்கு–வரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.

    இதனால் திருவையாறு தேரடியிலிருந்து, காவிரிப் பாலம் வரையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பஸ், லாரி முதலிய வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையாக நிறுத்தப்படும் சூழல் நிலவுகிறது. 

    இந்நிலை–யில், சமீபத்தில் திருவையாறு, கல்லணை சாலையில் உள்ள பூதலூர் தாலுகா திருச்செனம்பூண்டி மற்றும் திருவையாறு தாலுகா வடுகக்குடி கொள்ளிடம் ஆற்று மணல் குவாரிகளிலிருந்தும், திருவையாறு குடந்தை சாலையில் உள்ள பாபநாசம் தாலுகா, கணபதி அக்ரஹாரம் அருகில் உள்ள புத்தூர் கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியிலிருந்தும் மணல் ஏற்றிய லாரிகள் காலை 8 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும் தொய்வில்லாமல் வரிசையாக தொடர்ந்து கிழக்கு, மேற்கு என 2 திசைகளிலிருந்தும் வந்து திருவையாறு கடைவீதி மையப் பகுதியான தஞ்சாவூர் முக்கத்தில் சங்கமித்து தென்புறம் தஞ்சாவூர் நோக்கிச் செல்கின்றன.

    தஞ்சாவூர் செல்லும் மணல் லோடு ஏற்றிய லாரிகள் தொடர்ந்து திருவை–யாறு வழியாகவே செல்ல வேண்டியிருப்பதால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அடிக்கடி பஸ் முதலிய வாகனங்கள் நீண்ட நேரம் ஸ்தம்பித்து நிற்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

    இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் செல்ல முடியாமல், அடுத்த ட்ரிப் எடுப்பது பாதிக்கப்பட்டு நஷ்டமடைய வேண்டியிருக்கிறது. 

    ஏற்கனவே தஞ்சாவூர் மாநகராட்சி சாலைப் பணிகள் நடப்பதை முன்னிட்டு கூடுதலாக சில கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்வது குறிப்பிடத்தக்கது. இதனால் பஸ்சில் பயணிக்கும் மாணவர்கள், அரசு அலுவலக ஊழியர்கள். தனியார் நிறுவன ஊழியர்கள், ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். மேலும், திருவையாறு கடைவீதி பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களும் சாலையின் எதிரே கடந்து செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

    எனவே, பூதலூர் தாலுகா திருச்செனம்பூண்டி கொள்ளிடம் மணல் குவாரி லாரிகளையும், வடுகக்குடி கொள்ளிடம் மணல் குவாரி லாரிகளையும் திருக்காட்டு–ப்பள்ளி, பூதலூர் செங்கிப்பட்டி வழியாகவும், பாபநாசம் தாலுகா புத்தூர் கொள்ளிடம் மணல் குவாரி லாரிகளை கணபதி அக்ரஹாரம், மாகாளிபுரம், அய்யம்பேட்டை வழியாகவும் மட்டுமே செல்ல உத்தரவிட்டு, திருவையாறு நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து உதவிட ஆவன செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுககு பயணி–களும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×