என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரி அருகே பஸ்சில் வந்த பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் நகைகள் திருட்டு மற்றொரு பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

    கிருஷ்ணகிரி பஸ்ஸில் வந்த பெண்ணிடம் தங்கம்,வைர நகைகளை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி,

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 30). இவன் கோவைக்கு செல்வதற்காக தனியார் பஸ் மூலம்  புறப்பட்டு வந்தார். நேற்று காலை கிருஷ்ணகிரியில் ஓட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக பஸ்சை நிறுத்தியுள்ளனர். 

    ஆர்த்தியும் பஸ்ஸிலிருந்து இறங்கி சாப்பிட்டுவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஏறி தனது பையை திறந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான வைர, தங்க நகைகள்,வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. 

    அதிர்ச்சியடைந்த ஆர்த்தி இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடனை தேடி வருகின்றனர். 
    மற்றொரு சம்பவத்தில் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கலைச்செல்வி கோவிலுக்கு சென்று வீட்டுக்கு நடந்து வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி 
    அவர் அணிந்திருந்த  3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டான்.  இதுகுறித்து கலைச்செல்வி தந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×