என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்ண வண்ண மலர்கள் கலைவாணர் அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும் போது எடுத்த படம்.
சென்னையில் முதல் முதலாக நாளை முதல் ‘மலர் கண்காட்சி’
தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நாளை முதல் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக ஏராளமான வண்ண வண்ண மலர்கள் கலைவாணர் அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள் காட்சிக்கு வைத்துள்ளனர்.
இந்த மலர் கண்காட்சி நாளை முதல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம்.
இதற்கு நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ரூ.20-ம், பெரியவர்களுக்கு ரூ.50-ம் நிர்ணயம் செய்துள்ளனர்.

Next Story