search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்பாடி ரெயில்வே மேம்பாலம் மூடப்பட்டுள்ள காட்சி.
    X
    காட்பாடி ரெயில்வே மேம்பாலம் மூடப்பட்டுள்ள காட்சி.

    காட்பாடியில் பராமரிப்பு பணியால் ரெயில்வே மேம்பாலம் மூடல்

    காட்பாடியில் பராமரிப்பு பணியால் ரெயில்வே மேம்பாலம் மூடப்பட்டதால் பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி ரெயில்வே மேம்பாலம் பழுது பார்க்கும் பணி நடைபெறுகிறது. இதனால் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் இன்று காலை மூடப்பட்டது. இந்த பாலத்தின் மீது செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

    காட்பாடியிலிருந்து பாகாயம் மார்கமாக செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் காட்பாடி ரெயில் நிலையலித்திருந்து இயக்கப்படுகின்றன. குடியாத்தத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து டவுன் பஸ்கள் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை வழியாக டெல் வரை இயக்கப்படுகிறது.

    தடம் எண். 16பி, ஏ, 16 / டி, பஸ்கள் அனைத்தும் வேலூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து விரிஞ்சிபுரம், வடுகந்தாங்கல் வழியாக இயக்கப்படுகின்றன.

    தடம் எண்.16/இ, 16எப்/ஏ, ஆகிய தடப்பஸ்கள் பள்ளத்தூர், பரதராமிக்கு வள்ளிமலை கூட்டுரோட்டிலிருந்து இயக்கப்படுகிறது. மகாதேவமலை, ரகுநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு காட்பாடி, வள்ளிமலை கூட்டுரோட்டிலிருந்து பஸ்கள் புறப்பட்டுச் சென்றன. 

    தடம் எண்.20/ஏ, 20Aஏ, 20ஏ/பி, 20பி/ஏ, ஆகிய தடங்களில் விஐடி, இபி கூட்டுரோடு, திருவள்ளுவர் பல்கலைகழகம் வரை வழியாக இயக்கப்படுகிறது.

    தடம் எண். 20ஆர், 20 எம், பொன்னை புதூர் - காட்பாடி தெங்கால் - காட்பாடி ஆகிய இரு தடப்பஸ்கள் வள்ளிமலை கூட்டு ரோட்டிலிருந்து இயக்கப்படுகின்றன. தடம் எண்.14 பஸ் சேர்காடு காட்பாடி, வள்ளிமலை கூட்டு ரோடு இடையே இயக்கப்படுகிறது.

    வேலூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பஸ்கள் காட்பாடி, சித்தூர், பி.எஸ்.., வி.ஐ.டி. இ.பி., கூட்ரோடு, திருவள்ளுவர் பல்கலைகழகம், முத்தரசி குப்பம், சித்தூர் வழியாக இயக்கப்படுகின்றன.
    Next Story
    ×