என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் கவிழ்ந்து கிடக்கும் மினி டெம்போவை படத்தில் காணலாம்.
சேலம் அருகே சாலையில் திடீரென கவிழ்ந்த மினி டெம்போ
சேலம் அருகே சாலையில் திடீரென கவிழ்ந்த மினி டெம்போ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காகாபாளையம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ரெட்டி மணியக்காரன் பகுதியில் குளோபல் பிரஸசிங் என்ற தனியார் சேலைகள் மெருகேற்றும் கம்பெனி செயல்படுகிறது.
இந்நிலையில் கம்பெனிக்கு சொந்தமான மினி டெம்போ சேலைகள் லோடு எடுத்து வருவதற்காக இன்று மதியம் 12 மணியளவில் இளம்பிள்ளை பகுதியில் சென்று கொண்டிருந்தது. இளம்பிள்ளை அரசு மருத்துவமனை அருகே உள்ள வளைவில் சென்றபோது மினி டொம்போ திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லேசான காயங்களுடன் டிம்போ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் நடந்தவாறு உள்ளன. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






