என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
குண்டர் தடுப்பு சட்டத்தில் 76 பேர் கைது
திருச்சி மாநகர பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் குற்றச் செயல்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் இந்த 5 மாதங்களில் மட்டும் இரண்டு பெண்கள் உட்பட 76 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகம் என மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 76 நபர்களில் 35 பேர் தொடர்ச்சியாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவார்கள்.
மேலும் 24 பேர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்றும், வழக்கமான குற்றச் செயல்களுக்கு அப்பாற்பட்டு போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 9 மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒழுக்கமற்ற முறையில் வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கையால் ரவுடிகள் மற்றும் வழக்கமான வழிப்பறி திருட்டு வழக்குகள் குறைந்துள்ளதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.
Next Story






