search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    சேலம் கன்னங்குறிச்சியில் பெண் போலீஸ், வங்கி மேலாளர் வீடுகளில் நகை-பணம் கொள்ளை

    சேலம் கன்னங்குறிச்சியில் பெண்போலீஸ், வங்கி மேலாளர் வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி, மோட்டாங்குறிச்சி, தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான்கான். இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மசூதா, சென்னை ஆயுதப் படையில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். சேலத்தில்  இவர்களுக்குச் சொந்தமான  உள்ள வீட்டில் இம்ரான்கானின் அம்மா சப்ரா பேகம் மட்டும் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரும் வெளியூர்சென்று விட்டார்.

    இந்தநிலையில் இன்று 1-ந் தேதி அதிகாலை வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்னையில் உள்ள இம்ரான்கானுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேலம் கோரிமேட்டில் வசிக்கும் இம்ரான்கானின் அக்கா சமீம்பானு மற்றும் மாமா முஸ்தபா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள்அங்கு விரைந்து சென்று பார்த்த போது வீட்டில் இருந்த வெள்ளி மற்றும் பித்தளை சாமான்கள் மட்டும் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராஜா (வயது 33). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் இந்தியன் வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி ஸ்ரீஷா (30) சேலத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கிளார்க்காக பணி புரிந்து வருகிறார் . இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ராஜா இன்று அதிகாலை தனது வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்சசி அடைந்தார். கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டில் இருந்த ரூ. 55 ஆயிரம் மற்றும் 7.5 பவுன் தங்க நகை காணாமல் போனதாக ராஜா தெரிவித்தார். இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் விசாரணையில், இம்ரான் கானின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு திருட்டை அரங்கேற்றி விட்டு பிறகு அவரது வீட்டு மொட்டைமாடி வழியாக, பின்னால் உள்ள ராஜாவின் வீட்டிற்குள் நுழைந்து திருடியது தெரிய வந்தது. 2 திருட்டு சம்பவங்களும், வீட்டின் பிரதான மரக்கதவுகளை, இரும்பு கம்பியால் உடைத்து, ஒரே மாதிரியாக நடந்துள்ளது. இதனால் ஒரே நபர்கள் இதில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×