என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு
நூல் விலை எதிரொலி ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
நூல் விலை எதிரொலி ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள், வெளி மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகா ராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
சாதாரண நாட்களில் ரூ. 1 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் ரூ. 5 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று வரும். கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னர் படிப்படியாக வந்த போது தற்போது நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மொத்த விற்பனை கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் சுமாராக நடந்தது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் சில்லரை வியாபாரம் 25 சதவீதம் நடந்தது.
வெளிமாநில வியா பாரிகள் குறைந்த அளவே வந்திருந்ததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
Next Story






