search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் மேயர்  ஜெகன் பெரியசாமி பேசிய காட்சி.
    X
    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசிய காட்சி.

    தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி பெற புதிய திட்டப்பணிகள்-மேயர் ஜெகன்பெரியசாமி பேச்சு

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி பெற புதிய திட்டப்பணிகள் தொடங்கப்படும் என மேயர் ஜெகன்பெரியசாமி கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் அவசர கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் நடைபெற்றது, மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்.துணைமேயர் ஜெனிட்டா செல்வராஜ், ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தனர். 

    மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், 

    கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, அதிகாரிகள் ரூபன், பொன்னையா, அருண்குமார், சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், மற்றும் கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன்பெரியசாமி தொடக்க உரையாற்றி பேசுகையில், மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

     தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் வடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைத்தல், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் உட்பட, இருக்கும் நிதியை கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பேசினார். 

    மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் மேற்கொள்ள உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்களை வாசிக்க கூறினார். அதன்படி15-வது நிதிக்குழு மானியம் 2021-2022 நிதியின் கீழ் மேற்கொள்ளவுள்ள 48வகையான திட்ட பணிகளுக்கு அனுமதி கோருதல், மண்டலங்கள் வாரியாக வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுத்தல், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாகவும், 

    விபத்து ஏற்படும் வகையிலும் சாலை நடைபாதைகளில் நாள் முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனத்திற்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 10 ரூபாயும், கட்டணம் வசூலிப்பது, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து பாதுகாத்தல், அனுமதியற்ற, கட்டிடங்கள், வரை படத்தை மீறிய கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கைகள் எடுப்பது,

    பொதுசுகாதாரம் திடக்கழிவு மேலாண்மை பிரிவில் பணியாற்ற போதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்க நிர்வாக அனுமதியுடன் ஒப்பந்தப்புள்ளி மூலம் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகராட்சியில் தினசரி சேர்க்கப்படும் குப்பைகள் திடக்கழிவு, மக்கும் கழிவுகள் சாலையோரம் உள்ள கருவேல மரங்களை அகற்றும்பணிகள், சுகாதார பிரிவிற்கு பொது பயன்பாட்டிற்குபுதிய வாகனங்கள் கொள்முதல் செய்தல்,

     தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள முத்துநகர் கடற்கரை பூங்கா தற்போது சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிலையில் மாநகராட்சிக்கு வருவாய் பெருக்கும் வகையில் பூங்காவில் நிறுத்தப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது, வணிக வளாகம் பகுதிகடைகளில் ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் வருவாயை பெருக்குதல், 

    தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள 59 கடைகளில் வாடகை பாக்கி வசூலிப்பது, தூத்துக்குடி- மீளவிட்டான் ரெயில் நிலையத்திற்கு இடையே ரெயில் தடத்தில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது, மற்றும் மாநகராட்சி நிர்வாக பணிகள் உட்பட 35 வகையான பொருட் குறிப்புகள் குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    நடைபாதை வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், மந்திரமூர்த்தி, ஜெயலட்சுமி சுடலைமணி ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் வீரபாகு தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
    Next Story
    ×