search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை அருகே வாசனை திரவியம் உற்பத்திக்காக 15 ஏக்கரில் ரோஜா சாகுபடி

    12 ஆண்டுகள் வரை இதிலிருந்து பூக்கள் பறிக்கலாம்.

    உடுமலை:

    வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்புக்கு தேவையான ரோஜா உள்ளிட்ட மலர்கள் அதிகளவு உத்தரகாண்ட் மாநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அங்கு உள்ளதை போலவே கேரளா மாநிலம், மறையூர் அருகிலுள்ள காந்தலூர், கொழுந்த மலை பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் வாசனை திரவியம் உற்பத்திக்காக ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இங்கு பிங்க், மெரூன், ஸ்பானிஷ் யெல்லோ, ரூபி போன்ற வகையான ரோஜா செடிகள், உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து வாங்கி வரப்படுகிறது. அதே குளிர் சீதோஷ்ணம் நிலவும் காந்தலூர் மலைப்பகுதியில் சாகுபடி செய்து தினமும் 500 கிலோ ரோஜா பூக்கள் அறுவடை செய்து பெங்களூரு, வாசனை திரவிய உற்பத்தி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    வாசனை திரவியங்களுக்கான மலர் சாகுபடி முதல் முறையாக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயி ஜான் பிரிட்டோ கூறியதாவது: -

    பெரும்பாலும்வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்களுக்கு தேவையான மலர் வகைகள், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அங்கு சென்று இதற்கான பயிற்சி பெற்று வந்தேன். அங்கிருந்து வாசனை அதிகம் உள்ள நான்கு வகையான ரோஜா செடிகள், 30 ஆயிரம் வாங்கி வந்து நடவு செய்யப்பட்டுள்ளது. நடவு செய்த 3 மாதத்தில் பலன் கொடுக்க துவங்கியுள்ளது.

    12 ஆண்டுகள் வரை இதிலிருந்து பூக்கள் பறிக்கலாம். தினமும் சராசரியாக 500 கிலோ மலர்கள் கிடைக்கின்றன. பறித்தவுடன் பெங்களூரு நிறுவனத்தின் பிரீஷர் வாகனத்தில் வந்து கிலோ 100 ரூபாய்க்கு கொள்முதல் செய்து கொள்கின்றனர். 80 கிலோ பூவிலிருந்து ஒரு லிட்டர் வாசனை திரவியம் அங்கு உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு லிட்டர் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இது சென்ட், அழகு சாதன பொருட்கள், ஆயுர்வேத மருந்துகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கேரளா மாநிலத்தில் முதல் முறையாக வாசனை திரவியத்திற்காக, மலர் சாகுபடி முதலில், இப்பகுதியில் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஜான் பிரிட்டோ தெரிவித்தார்.

    Next Story
    ×