search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் சங்கர்லால் குமாவத்  சான்றிதழ் வழங்கினார்.
    X
    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் சங்கர்லால் குமாவத் சான்றிதழ் வழங்கினார்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. 

    நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் 228 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த  மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் வட்டக்கிணறு நடைமேடை மண் சரிந்து புதையுண்டு இறந்தவரின் வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5 ஆயிரத்து 341 மதிப்பீட்டில் சலவை பெட்டியும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் தையல் எந்திரங்களையும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் கலால்துறை சார்பில் நடத்தப்பட்ட மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி களில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணே சன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×