search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் சிரசு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
    X
    அம்மன் சிரசு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.

    குடியாத்தம் தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா

    குடியாத்தம் தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நேற்று நடைபெற்றது.

    குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், கடந்த வியாழக்கிழமை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியும், சனிக்கிழமை ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலையில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.

     அம்மன் சிரசு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. தொடர்ந்து கோவிலில் கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின் சுற்றுப்புற கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கெங்கையம்மனை தரிசனம் செய்தனர். 
    Next Story
    ×