search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
    X
    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

    தஞ்சை மாவட்டத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் இலவச மற்றும் கட்டாய கலவி உரிமை சட்டத்தின்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட எஸ்.சி, எஸ்.டி, பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி 
    பிரிவைச் சேர்ந்தவர்கள்  மற்றும் நலிவடைந்த பிரிவினரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களின் குழந்தைகளுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது.

    இந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,790 இடங்கள் ஒதுக்கீட்டுக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 258 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், 213 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
      
    எனவே நாளை (30-ம்தேதி) முதன்மை கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் துறை பிரதிநிதி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் முன்னிலையில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டிற்கு குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெற உள்ளது. 
    குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள், காத்திருப்பு பட்டியல் விபரங்கள் வரும் 31-ம் தேதி அன்று பள்ளியின் தகவல் பலகை மற்றும் இணையதளத்தில் வெளியிடப்படும்.
      
    எனவே, 2022-23 ஆம் கல்வியாண்டில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டில், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு வகுப்பான எல்கேஜியில், சேர்க்கை செய்வதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த அனைத்து பெற்றோர்களும் நாளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் காலையில் நடைபெறும் குலுக்கலில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ளவேண்டும்.

    பொதுத்தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில் அன்றைய தினம் பிற்பகல் குலுக்கல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×