என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

    டி.என்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    டி.என்பாளையம்:

    டி.என்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த அத்தாணி- சத்தியமங்கலம் ரோடு பெருமுகை ஊராட்சி வரப்பள்ளம் பகுதியில் 69 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சென்று கொண்டு இருந்தார். 

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.  இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

     இதில் அவர் அத்தாணி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த முனியன் என்ற கென்னடி (69) என தெரிய வந்தது.இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×