search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலையில் காற்றின் வேகம் அதிகரிப்பு வாழை மரங்களுக்கு முட்டு கொடுக்கும் பணிகள் தீவிரம்

    கடந்த சில நாட்களாக, மழை இடைவெளி விட்டு, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வறட்சியாக வேகத்துடன் காற்று வீசுவதால் விளைநிலங்களில் ஈரப்பதம் வேகமாக காய்ந்து விடும்.
    உடுமலை:

    உடுமலை பகுதியில் ஆண்டுதோறும், ஏப்ரல் முதல் வாரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து, செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்த சீசனின் போது வீசும் காற்றால், காற்றாலைகளில் மின் உற்பத்தி கூடுதலாகும்.

    இந்த முக்கிய காற்று சீசனை அடிப்படையாகக்கொண்டே, உடுமலை சுற்றுப்பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக, காற்று சீசன்  ஏப்ரல் மாதத்தில் துவங்காமல் தாமதமானது.கோடை கால மழையும் குறிப்பிட்ட இடைவெளியில்பெய்து ஈரக்காற்றும் அதிக நாட்கள் வீசியது. இம்மாத துவக்கத்திலும் காற்றின் வேகம் குறைவாகவே இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக, மழை இடைவெளி விட்டு, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதே போல் காற்றின் வேகமும் கூடுதலாகியுள்ளது.உடுமலை பகுதியில் சராசரியாக மணிக்கு 23 கி.மீ., என்ற அடிப்படையில் காற்றின் வேகம்  உள்ளது.இந்நிலை நீடித்தால், காற்றாலைகளில் மின் உற்பத்தி, இலக்கை எட்டும் வாய்ப்புள்ளது.அதிக காற்றால் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வறட்சியாக வேகத்துடன் காற்று வீசுவதால் விளைநிலங்களில் ஈரப்பதம் வேகமாக காய்ந்து விடும். எனவே விவசாயிகள் அதற்கேற்ப நீர் நிர்வாகத்தை மாற்றி வருகின்றனர். தென்னை மரங்களின் வட்டப்பாத்தியில் மூடாக்கு அமைத்தல், பலத்த காற்றால் மரங்கள் சாயாமல் இருக்க அறுவடைக்கு தயாராக இருக்கும் வாழை மரங்களுக்கு முட்டு கொடுத்தல், கயிறு கட்டுதல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.தென்மேற்கு பருவமழை துவங்கும் வரை வறண்ட காற்று மற்றும் வெயில் இதே நிலையில் நீடிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×