என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி இனிப்ப வழங்கிய காட்சி.
    X
    புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி இனிப்ப வழங்கிய காட்சி.

    புதுச்சேரியில் பா.ம.க இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    பா.ம.க. தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று புதுவையில் பா.ம.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    புதுச்சேரி:

    சென்னையில்  நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும்  எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதனை வரவேற்று கொண்டாடும் வகையில் புதுவையில் பா.ம.க.வினர் பல இடங்களில் கொண்டாடினர்.

    புதிய பஸ் நிலையம் மற்றும் ராஜா தியேட்டர் சிக்னலில் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி  பா.ம.க.வினர் கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர்கள் வடிவேல், மதியழகன் இளைஞர் சங்க செயலாளர் சேகர், வன்னிய சங்க பொறுப்பாளர்கள் முருகன், நரசிம்மன், நாகப்பன், மாநில தொழிற்சங்க செயலாளர் பாண்டித்துரை, வேல்முருகன் , பாட்டாளி உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் மணிபாலன் மாநில மகளிர்சங்க நிர்வாகிகள் ஜோதி பிரியா, வெர்ஜினியா,நகர தலைவர் தமிழ் செல்வம், நகர செயலாளர் நாகமுத்து, தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணி, ஊடக பேரவை ராகுல், மற்றும் தொகுதி தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×