என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாய்பாபாவுக்கு இளநீர் அபிஷேகம் செய்த காட்சி.
சாய்பாபாவுக்கு அபிஷேகம்
சாய்பாபாவுக்கு 108 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு அருகேயுள்ள வழிகாட்டு சாய்பாபா ஆலயத்தில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி சாய்பாபாவுக்கு 108 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
ஒவ்வொரு பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்க அவர்களுடைய பெயர்களை கூறி அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாய்பாபாவுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சாய்பாபாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட இளநீர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வழிகாட்டும் சாய்பாபா ஆலய டிரஸ்டி சாய்சசி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Next Story






