என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருங்கல்லில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு 3 பேர் மீது போலீசில் புகார்
விவசாயிக்கு அரிவாள் வெட்டு 3 பேர் மீது போலீசில் புகார்
கன்னியாகுமரி, மே. 28-
கருங்கல் அருகே உள்ள மாங்கரை வட்டக்கோட்டை செக்கிட்டான்விளையை சேர்ந்தவர் தாம்சன் (வயது 56), விவசாயி.
இவரது மகளை ஈச்ச விளையை சேர்ந்த அஜிஷ் (20) காதலிப்பதாக கூறப்ப டுகிறது. இதனை அறிந்த தாம்சனின் மகன் லாக்வின் அஜிசை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று லாக்வின் கருங்கலில் கடை ஒன்றில் நிற்கும் போது அங்கு அஜிஷ் அவரது நண்பர்கள் வெள்ளியாவிளையை சேர்ந்த ஜோஸ் (23), காக்கவிளையை சேர்ந்த சிஜூ (20) ஆகியோர் வந்தனர். அவர்கள் லாக்வி னிடம் தகராறு செய்தனர்.
அப்போது அங்கு வந்த தாம்சன் இதனை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜி சும் அவரது நண்பர்களும் கறி வெட்டும் கத்தியால் வெட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து தாம்சன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர்.
காயமுற்ற தாம்சன் கருங்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story






