search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் யூனியன்  அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
    X
    திருப்பத்தூர் யூனியன் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.

    யூனியன் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

    திருப்பத்தூர் யூனியன் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி   ஆய்வு செய்தார். 

    ஊராட்சி ஒன்றியங்க ளுக்கு ஒதுக்கப்படும் திட்ட நிதிகள் பற்றிய  விபரம், பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பீடு,  முடிவுற்ற பணிகளுக்காக வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை, பிற துறைகளுக்கு கட்ட வேண்டிய கட்டணம், ஆக்கிரமிப்பு குறித்த விவரம், அவைகள் அகற்றப்பட்ட நிலவரம், மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீடு வழக்குகள், கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர், பணியாளர்களின் பணிவரன்முறை, நிலுவையிலுள்ள விவரம், பணியாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டார். 

    அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை  தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் முதலியவற்றை ஆய்வு செய்து அது குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். 

    அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட உள்ள அலுவலகத்திற்கான இடம், அளவீடு, இடம்பெற வேண்டிய அலுவலகங்கள் அதற்கானவசதிகள் போன்றவற்றிக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்தல் குறித்து கேட்டறிந்ததுடன்   கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ள இடத்தையும்  பார்வையிட்டார்.

    உதவி இயக்குனர் குமார், திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தென்னரசு, ஜஹாங்கீர் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக பணியாளர்கள்   உடனிருந்தனர்.
    Next Story
    ×