search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை
    X
    மதுரை

    25 நாட்கள் வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் முடிந்தது

    25 நாட்கள் வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப தாக்கம் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது‌.
    மதுரை

    கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 25 நாட்க ளாக வாட்டி வதைத்தது. இதன் காரண மாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது. 

    103 டிகிரிக்கு மேல் வெப்பம் இருந்தால் பொதுமக்கள் பகல் நேரங்க ளில் வெளியில் நடமாட முடியாத நிலை இருந்தது.இதன் காரணமாக வெப்பத்தை தணிக்கும் வகையில் நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர் மோர் உள்ளிட்ட குளிர் பானங்கள் மற்றும் பழ வகைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர்.

    இந்தநிலையில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் தாக்கம் இருந்தாலும் மாலை நேரங்களில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. பலத்த இடி மின்னலுடன் சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவியது. 

    இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இன்று அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தாலும் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப தாக்கம் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது‌.

    கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இதமான காலநிலை நிலவும் என்றும், சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

     எனவே அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் சில நாட்களில் பருவமழை தொடங்க இருப்பதால் விவசாய பணிகளை தொடங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். 
    மேலும் அடுத்த மாதம் வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதற்காக பிரதான கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணியும் தொடங்கி உள்ளன.
    Next Story
    ×