search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் கோரிக்கை மனு வழங்கினார்.
    X
    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் கோரிக்கை மனு வழங்கினார்.

    பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் அமைச்சரிடம் கோரிக்கை

    பாபநாசம் ஒன்றியத்தில் பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என அமைச்சரிடம் ஒன்றியக்குழு தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    பாபநாசம்:

    பாபநாசம் வந்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழியிடம் பாபநாசம் ஒன்றிய குழுத்தலைவர் சுமதி கண்ணதாசன் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

    அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பாபநாசம் ஒன்றியம் ராமானுஜபுரம் ஊராட்சியில் உள்ள கிளை வாய்க்கால்கள் 1000 ஏக்கருக்கு மேல் விவசாயத்திற்கான தண்ணீரை நம்பியுள்ளது. உமையாள்புரம் வாய்க்கால், கருப்புசாமி கோவில் வாய்க்கால், பூரான் வாய்க்கால், முத்து கண்ணி வாய்க்கால், பிடாரி கோவில் வாய்க்கால், பள்ள வாய்க்கால், கப்பல் வாய்க்கால், தாமரைக்குளம் வடிகால் வாய்க்கால் ஆகிய கிளை வாய்க்கால்களை தூர்வாரி பாசன மேம்பாட்டிற்கு ஆவன செய்திட வேண்டும்.

    மேலும் பாபநாசம் ஒன்றியத்தில் 1990-ம் ஆண்டிற்கு முன்பாக கட்டப்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் மிகவும் பழுதடைந்த நிலையில் மழைநீர் வீட்டிற்குள் கசியும் நிலையில் இருந்த தொகுப்பு வீடுகள் சென்ற பருவமழையில் கண்டறியப்பட்டது.

    அதில் தற்போது மிகவும் மோசமான நிலையில் எந்த நேரத்திலும் இடிந்து விழக் கூடிய அபாயகரமான நிலையில் உள்ள சோமேஸ்வரபுரம், உம்பளப்பாடி, ராமானுஜபுரம், ஓலைப்பாடி மற்றும் சருக்கை ஆகிய ஊராட்சி பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 

    எனவே பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் வாழ்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×