என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே சத்துமாவு சாப்பிட்ட 30 குழந்தைகள் மயக்கம்
    X
    திண்டிவனம் அருகே சத்துமாவு சாப்பிட்ட 30 குழந்தைகள் மயக்கம்

    திண்டிவனம் அருகே சத்துமாவு சாப்பிட்ட 30 குழந்தைகள் மயக்கம்

    திண்டிவனம் அருகே சத்துமாவு சாப்பிட்ட 30 குழந்தைகள் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நெற்குப்பி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சென்று வருகின்றனர்.

    இன்று காலை அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட ஒரு குழந்தை மயக்கம் அடைந்து விழுந்தது. அடுத்து ஒவ்வொரு குழந்தையும் மயங்கியது. ஒரே நேரத்தில் 30 குழந்தைகள் மயங்கியதால் பரபரப்பு எற்பட்டது.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அலறியடித்து கொண்டு அங்கன்வாடி மையத்துக்கு வந்தனர். தங்களது குழந்தைகள் மயக்கம் அடைந்தது குறித்து பதறிபோனார்கள்.

    உடனடியாக குழந்தைகள் அனைவரும் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஒலக்கூர் யூனியன் துணை தலைவர் ராஜாராம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிகிச்சையினை முடுக்கிவிட்டார்.

    இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சத்து மாணவில் பல்லி விழுந்ததால் வாந்தி ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    Next Story
    ×