search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்லும்

    நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    நெல்லை:

    நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயிலுக்கு தென் மாவட்ட மக்களிடையே சிறப்பான வரவேற்பு உள்ளது.

    தற்போது இந்த ரெயிலை நிரந்தரமாக ஆண்டு முழுவதும் இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே இந்த வாராந்திர ரெயிலுக்கு சங்கரன்கோவிலில் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
    சங்கரன்கோவில் வளர்ந்து வரும் நகராட்சி என்பதால் அங்கு இந்த சிறப்பு வாராந்திர ரெயிலை நிறுத்தி செல்ல வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு ரெயில் பயணிகள் சங்கத்தினரும், எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் நின்று செல்லும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    அதன்படி வருகிற 2-ம் தேதி நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் மேட்டுபாளையம் சிறப்பு ரெயில் இரவு 9.13 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில் நிலையத்திற்கு சென்றடையும். அங்கு இருந்து 9.15 மணிக்கு புறப்பட்டு 9.43 மணிக்கு ராஜபாளையம் சென்றடையும். மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுபாளையம் சென்றடையும்.

    இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 3-ம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 4.18 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தடையும். அங்கிருந்து 4.20 மணிக்கு புறப்பட்டு 7:45 மணிக்கு சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதனால் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×