என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரணம்
மதுரவாயல் அருகே 2-வது மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் பலி
மதுரவாயல் அருகே 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது29). பெயிண்டர். இவர் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் நேதாஜி நகரில் உள்ள புதிய கட்டிடத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று 2-வது மாடியில் நின்றபடி ஜெயசீலன் பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தார்.
அப்போது ஜெயசீலன் எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story