search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆளுநர் ஆர்.என்.ரவி
    X
    ஆளுநர் ஆர்.என்.ரவி

    திருவாரூருக்கு ஆளுநர் வருகை

    மத்திய பல்கலைக்கழக கருத்தரங்கை தொடங்கி வைப்பதற்காக திருவாரூருக்கு நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி வருகிறார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு நாளை (27-ந் தேதி) தொடங்குகிறது. இந்த கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.  ரவி தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக அவர் நாளை காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருவாரூக்கு வருகிறார். 

    இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் சுபாஷ் சார்க்கர், சிக்சா சேன்ஸ்கிரிட் உத்தன் நயாஸின், தேசிய செயலாளர் அதுல் கோத்தாரி, மத்திய ஆராய்ச்சித்துறை இயக்குனர் ஆசிர்வாதம் ஆச்சாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். 

    இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், மற்றும் பதிவாளர் சுலோச்சனா சேகர் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொள்கின்றனர். 

    இந்த கருத்தரங்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். 

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×