என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் மர்ம நபர் வீடு புகுந்து நகையை பறித்து சென்றார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை நல்லம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் தவமணி, கூலி தொழிலாளி. இவரது மனைவி தாமரை புஷ்பம்(வயது 65). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.
கணவன், மனைவி மட்டும் கிராமத்தில் தனது வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு 9.30 மணியளவில் தாமரை புஷ்பம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது வீட்டின் பின்புற வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் தாமரை புஷ்பம் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்தான்.
அதிர்ச்சியடைந்த தாமரை புஷ்பம் திருடன்... திருடன்... என்று சத்தம் போடவே மர்ம நபர் நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். இதுகுறித்து தாமரை புஷ்பம் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி நகையை பறித்து கொண்டு ஓடிய மர்ம நபரை தேடி வருகிறார்.
Next Story