என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.6.81 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.80க்கும், குறைந்தபட்சமாக ரூ.71க்கும், சராசரியாக ரூ.78க்கும் விற்பனையானது.
காங்கயம்:
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.81 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 13 விவசாயிகள் 182 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 8,820 கிலோ. காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 5 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.
கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.80க்கும், குறைந்தபட்சமாக ரூ.71க்கும், சராசரியாக ரூ.78க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.6.81 லட்சம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.
Next Story






